க்ரெடிட் கார்டு பயனர்களுக்கு ஆ.ர்.பி.ஐ-யின் புதிய சலுகை
1 min read
RBI’s new offer for credit card users
30.4.2026
க்ரெடிட் கார்டு பில் செலுத்த வேண்டிய கடைசி தேதியைத் தவறவிடும் பயனர்களுக்கு 3 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கும் புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளின்படி, கட்டணம் செலுத்த வேண்டிய நாளை தவறவிட்டாலும், அடுத்த மூன்று நாட்களுக்குள் அபராதம் இல்லாமல் கட்டிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலக்கட்டத்தில் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 நாட்களுக்குப் பிறகும் பணம் செலுத்தவில்லை என்றால், அபராதக் கட்டணம் மொத்த தொகைக்கு அல்லாமல், செலுத்த வேண்டிய மாத நிலுவைத் தொகைக்கு மட்டுமே கணக்கிடப்படும்.
இந்த விதி அடுத்தாண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.