அஸ்ஸாமில் பாஜக அமோக வெற்றி
1 min read
BJP’s landslide victory in Assam
4.5.2026
அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக – என்டிஏ கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.
4.5.2026
அசாம் சட்டமன்றத்தில் மொத்தம் 126 இடங்கள் உள்ளன. அவற்றுக்கு கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.
ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை இடங்களைக் கடந்து பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 100 இடங்களைத் தாண்டி வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா எக்ஸ் வலைதளத்தில், 100 இடங்களைக் கடந்து ஹாட்ரிக் வெற்றி என பதிவிட்டுள்ளார்.
அஸ்ஸாமில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க உள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பக்கத்தில்,
அஸ்ஸாம் மக்களிடையே இரவும் பகலும் அயராது உழைத்து வரும் அனைத்து பாஜக-என்டிஏ தொண்டர்களையும் நான் பாராட்டுகிறேன்.
கடந்த பத்தாண்டுகளில் பாஜக கட்சியும் கூட்டணியும் அடைந்துள்ள வளர்ச்சி மிகவும் பாராட்டுக்குரியதாகும். நமது ஆக்கபூர்வமான செயல்திட்டங்கள் மக்களின் மனதை ஆழமாகச் சென்றடைவதை இவர்களின் முயற்சிகளே உறுதி செய்துள்ளன. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.