October 16, 2026

Seithi Saral

Tamil News Channel

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்துக்கு சுப்ரீகம்கோர்ட்டு அனுமதி… ஆனாலும் எச்சரிக்கை

1 min read

Supreme Court permits Janata Party’s ‘cockroach’ protest… but issues a warning

16.10.2026

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தீவிரமாக போராடி வருகின்றனர். இதனால் ஜந்தர் மந்தர் பகுதி முழுவதும் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. எனவே டெல்லியின் போராட்டக்கள பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தரை அரசு நீக்கிவிட்டது. அதை சுற்றியுள்ள பகுதிகளில் 163 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இந்த உத்தரவையும் மீறி கட்சியின் நிர்வாகிகள் சவுரவ்தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோர் ஜந்தர் மந்தர் சாலையில் உள்ள தடுப்பு வேலிகளைத் தாண்டி குதித்தனர். அப்போது ஏற்கனவே வழங்கியிருந்த உத்தரவாத பத்திரத்தை மீறி ஜந்தர் மந்தரில் அத்துமீற முயன்ற அசுதோஷ் ரங்கா, சவுரவ் தாஸ் ஆகிய 2 பேருக்கும் 5 நாள் நீதிமன்றக்காவல் விதித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இருவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், போராட்டத்தால் பண்டிகை காலங்களில் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி கன்னாட் பிளேஸ் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் டெல்லி ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நிலையில், கன்னாட் பிளேஸ் வியாபாரி சுப்ரீம் கோர்ட்டில் அவசர இன்று வழக்கு தாக்கல் செய்தார்.

இதனை அவசர வழக்காக விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, போராட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும், போராட்டம் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்திய நீதிபதிகள், வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சட்டவிரோதமான சூழல் உருவானால், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுப்போம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *