விஜய்யுடன் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சந்திப்பு
1 min read
DGP Sandeep Roy Rathore meets Vijay
6.5.2026
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனையடுத்து தவெகவின் சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் தலைவர் விஜய் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சூழலில், ஆட்சியமைக்க உரிமை கோரி கவர்னரிடம் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
தவெக தலைமையிலான புதிய அரசு அமையவுள்ள நிலையில், பதவியேற்பு விழா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில், விஜய்யை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது