June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்திய கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ராமச்சந்திரன்

1 min read

Indian Communist. Legislative Party Leader Ramachandran

8.5.2026
இந்திய கம்யூனிஸ்ட் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக டி. ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக இன்று நடந்த அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தவெக ஆட்சியமைக்க ஆளுநருக்கு வழங்கப்பட உள்ள ஆதரவுக் கடிதத்தில் ராமச்சந்திரன் கையெழுத்திட்டுள்ளார்.

நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தளி தொகுதியில் டி.ராமச்சந்திரனும் திருத்துறைப்பூண்டியில் மாரிமுத்துவும் வெற்றி பெற்றனர்.

பேரவைத் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இடங்கள் தவெகவுக்கு கிடைக்காத நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியிடம் அக்கட்சி ஆதரவு கோரியிருந்தது. இதையடுத்து தவெகவுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரவு தெரிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் வழங்கியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *