June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

மார்க்சிய கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக ஆர். செல்லசுவாமி தேர்வு

1 min read

R. Chelaswamy elected as leader of the Marxist Communist Party Legislative Assembly

8.5.2026
மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக செல்லசுவாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்று 5 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

கீழ்வேளூரில் போட்டியிட்ட லதாவும், பத்மநாபபுரத்தில் போட்டியிட்ட ஆர். செல்லசுவாமி இருவரும் வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில், மார்க்சிய கம்யூனிஸ்ட் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. ஆர்.செல்லசுவாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் பேரவைத் தொகுதியில் மார்க்சிய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆர். செல்லசுவாமி 15,569 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இடங்கள் தவெகவுக்கு கிடைக்காத நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியிடம் அக்கட்சி ஆதரவு கோரியிருந்தது.

இதையடுத்து தவெகவுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரவு தெரிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிகள் கடிதங்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *