June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்!

1 min read

Vijay thanked the communist parties in person!

8/5/2026

சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்ற விஜய், மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்ற விஜய், தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கும் சென்றார்.

பெரும்பான்மைக்கான சிக்கல் தீர்ந்த நிலையில் பனையூர் அலுவலகம் அருகே குவிந்த தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் தவெக சார்பில் 233 பேர் போட்டியிட்ட நிலையில் 107 பேர் எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

விஜய் ஆட்சியமைக்க 118 பெரும்பான்மை தேவைப்படும் நிலையில் காங்கிரஸ்(5), சிபிஐ(2), சிபிஎம்(2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(2), விசிக(2) ஆதரவு அளித்துள்ளனர்.

இதையடுத்து தவெகவின் பலம் 120 எம்எல்ஏக்களாக உயர்ந்துள்ளது.

தவெகவுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரவு தெரிப்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *