August 21, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆலங்குளம் அருகே புதுப்பட்டியில் இந்து சமய பண்பாட்டு வகுப்புகள்

1 min read

Hindu religious and cultural classes in Pudhupatti near Alankulam

17.5.2026
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே புதுப்பட்டியில் இந்து சமய பண்பாட்டு வகுப்பு நிறைவு விழாவில் நம்ம டாக்டர் இம்மானுவேல் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

ஆலங்குளம் அருகேயுள்ள புதுப்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் திடலில் இந்து சமய பண்பாட்டு வகுப்பு நடைபெற்றது. இதில் புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு இந்து தர்மம், பாரம்பரியம், பண்பாடு, திருமுறைகள் மற்றும் நன்னெறிகள் குறித்து முறையாக கற்றனர். இதன் நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ் விழாவில் பாரத் ஸ்கேன்ஸ் நிறுவனர் நம்ம டாக்டர் இம்மானுவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.
அதனைத் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இநத விழாவில் புதுப்பட்டி ஊராட்சி தலைவர் பால்விநாகம், ஆசீர்வாதம், ஹரிராம் திருமால், ராஜ், பால் துரை, முத்து ஆனந்த் மற்றும் ஆசிரியர்கள், கோவில் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *