August 21, 2026

Seithi Saral

Tamil News Channel

தோரண மலை முருகன் கோவில் நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் கோரிக்கை

1 min read

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; highlight: false; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

Schoolgirls’ request at the Thoranamalai Murugan Temple event

17.5.2026
தென்காசி மாவட்டம் கடையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இது அகத்தியர், தேரையர் போன்ற சித்தர்களாலும் முனிவர்களாலும் வழிபட்ட திருத்தலமாகும். இந்த கோவிலில் உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழித்திட வேண்டியும் வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று இக்கோவில் தல விருட்ஷமாக, ஈசன்,, பார்வதியாகவும் போற்றப்படும் அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்க்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சப்த கன்னியர்களுக்கும், புனித சுனை நீர் மற்றும் 27 நட்சத்திரங்களுக்கான மரங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பள்ளி குழந்தைகளை கொண்டு சரஸ்வதி அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, ஆலய வளாகத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சிகள் நடைபெற்றது.
பயிற்சியின் போது தற்காப்பு கலையில் மாநில அளவில் தங்கப்பதக்கம் வென்று முதலிடம் பிடித்த மாணவி நதி வர்ஷா கூறியதாவது:-
தோரணமலை கோவிலில் நடைபெறும் விளையாட்டு பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றுள்ளேன். மாநில அளவில் நடைபெற்ற ஊசூ தற்காப்புக் கலையில் தங்கப்பதக்கம் வென்று முதல் இடம் பிடித்துள்ளேன். தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கு பெற்று வருகிறேன்.
மேலும் கராத்தே, யோகா, சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை அனைத்து அரசு பள்ளிகளிலும் கட்டாயப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டாம். தற்காப்புக் கலைகளை பயில்வது, பெண் குழந்தைகளுக்கு பயனுள்ளதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். எனவே புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார். இதே கருத்தை பல மாணவிகளும் வலியுறுத்தினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *