தென்காசி மாவட்ட ஓய்வூதியோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 24-ந் தேதி நடக்கிறது
1 min read
Tenkasi District Pensioners Grievance Redressal Day meeting to be held on the 24th
20.5.2026
தென்காசி மாவட்டத்தில் ஓய்வூதியோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம். மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் சென்னை, கருவூலம் மற்றும் கணக்குத்துறை இயக்குநரால் வருகிற (24.07.2026) வெள்ளிக் கிழமை அன்று காலை 10.30 மணியளவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் வைத்து நடைபெறவுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசுத்துறையில் (அரசின் நேரடி துறையில் பணிபுரிந்தவர்கள் மட்டும்) பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்கப்பெறாமல் நிலுவையாக இருப்பின் தங்களுடைய குறைகளை தெரிவித்து முழு முகவரியுடன் விண்ணப்பங்களை இரட்டைப் பிரதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு பின்வரும் தகவல்களுடன் 24.06.2026 க்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
ஓய்வூதியோர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஓய்வூதியதாரர்கள் தவறாது கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார் கள் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். தெரிவித்துள்ளார்.