June 20, 2026

Seithi Saral

Tamil News Channel

அமைச்சரிடமே லஞ்சம் திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர் சஸ்பெண்ட்

1 min read

Tiruchendur temple priest suspended for bribing minister

29.5.2026
அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் திருச்செந்துார் கோவில் பாதுகாவலர்கள் 2 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். அர்ச்சகர் ஐயப்பன் கோவிலில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று ஆய்விற்காக சென்றுள்ளார். அவர் அமைச்சர் பொறுப்பு வகிப்பது தெரியாத வகையில் தனது உதவியாளருடன் சாதாரண மனிதர் போல் சென்று இருக்கிறார். கோவில் வளாகத்திற்கு வந்து சுற்றிப்பார்த்துள்ளார்.
அப்போது கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு கட்டணம் எவ்வளவு? என அங்கு இருந்த அர்ச்சகர்களிடம் அமைச்சர் ரமேஷ், அவரது உதவியாளர் கேட்டு இருக்கின்றனர். இதற்கு அர்ச்சகர் ஒரு ஆளுக்கு 2 ஆயிரம் ரூபாய், இரண்டு பேருக்கு 4 ஆயிரம் ரூபாய் தாருங்கள் என்று கேட்டு இருக்கிறார். அந்த அர்ச்சகரிடம் அமைச்சர் உதவியாளர் பணம் இல்லை, ஜிபேயில் தான் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். உடனே அர்ச்சகர் தனது ஜிபே நம்பரை சொல்லி ரூ.4 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டார்.


பிறகு அமைச்சர் ரமேஷ் மற்றும் அவரது உதவியாளரிடம் ரூ.4 ஆயிரம் பெற்ற அர்ச்சகர், அவர்களின் உண்மையான அடையாளம் தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து முடி காணிக்கை செலுத்தும் இடம், அன்னதான கூடத்தில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தார். தற்போது முறைகேடு செய்தவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


அமைச்சர் ரமேஷிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் திருச்செந்துார் கோவில் பாதுகாவலர்கள் கருப்புசாமி, தோப்பு ஆகிய 2 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். அர்ச்சகர் ஐயப்பன் கோவிலில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் முடி இறக்கும் தொழிலாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *