June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: முதியோர் கொடுமை ஒழிப்பு பற்றிய உறுதிமொழி ஏற்பு

1 min read

Tenkasi: Taking a pledge to eliminate elder abuse.

16/6/2026
தென்காசி,மூத்தோர் மன்றம் மற்றும் டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் தல அறக்கட்டளை சார்பாக முதியோர் முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்ச்சி தினம் ஜூன் 15 தென்காசி பள்ளிகளில் கொண்டாடப்பட்டது

தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முதியோர் விழிப்புணர்ச்சி தினத்திற்கு மூத்தோர் மன்றத் தலைவர் அழகர்ராஜா தலைமை தாங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியை அன்புமனி முன்னிலை வகித்தார். மூத்தோர் மன்ற பொருளாளர் நல்லாசிரியர் கை.கணேசமூர்த்தி வாசிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் முதியோர் தின உறுதிமொழியை உணர்ச்சிப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர். செயலர் ராமலிங்கம் நன்றி கூறினார்.

மேலும் இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி, மேலகரம் அரசு மேல்நிலைப்பள்ளி, கீழப்புலியூர் இந்து மேல்நிலைப்பள்ளி மற்றும் எல்லா பள்ளிகளிலும் மாணவ மாணவிகள் முதியோர் தின உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

மூத்தோர் ம ன்ற உறுப்பினர்கள் இலஞ்சி முத்துசாமி, ஆசிரியர் கதிர்வேல், அய்யம்பெருமாள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர் கூட்ட ஏற்பாட்டினை தென்காசி மூத்தோர் மன்றம் சிறப்பாக செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *