சேரன்மகாதேவியில் மாணவிக்கு பாலியல் தொல்லை- முதியவர் கைது
1 min read
Elderly man arrested for sexually harassing a female student in Cheranmahadevi
16.6.2026
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட முக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் என்ற குமரன், 60 வயது முதியவரான இவர் கூலி வேலை பார்த்து வந்த நிலையில் 10 -ம் வகுப்பு பயிலும் 15 வயதுடைய பள்ளி மாணவிக்கு ஆபாச செய்கைகள் மூலமாக பாலியல் தொந்தரவும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இப்பிரச்சனை குறித்து மாணவி அவரது தாயிடம் நடந்த விபரத்தை தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மாணவியின் தாய் சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் முதியவர் முத்துக்குமாரனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்த நிலையில் அவர் பாலியல் சீண்டல் உள்ளிட்ட ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..