June 20, 2026

Seithi Saral

Tamil News Channel

‘வெள்ளை அறிக்கை தீர்வுகளை வழங்க வேண்டும்’- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

1 min read


‘White paper must offer solutions’ – Pon. Radhakrishnan’s statement

17.6.2026
தமிழக நிதி நிலையை அறியாமல் தேர்தல் நேரத்தில் த.வெ.க., வாக்குறுதிகளை அள்ளி வீசியது. இப்போது அரசிடம் நிதி இல்லை என்பதை வெளிப்படுத்தவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது, என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் அவரளித்த பேட்டியில் கூறியதாவது: பிரதமர் மோடியின் 4400 நாட்கள் ஆட்சி இந்தியாவை உலக அரங்கில் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. உலக நாடுகளுக்கிடையே ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் தலைவராக பிரதமர் மோடி உள்ளார்.
மதுரை-மணியாச்சி-தூத்துக்குடி-நாகர்கோவில்-திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை திட்டத்தை மத்திய அரசு ரூ.4000 கோடி செலவில் நிறைவேற்றியது. குஜராத்தை சேர்ந்தவராக இருந்தாலும் மோடிக்கு தமிழ் மீது தனிப்பட்ட பாசம் உள்ளது.

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு, சட்டம்- ஒழுங்கு மோசமாக உள்ளது. பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்குகள் அதிகரிக்கின்றன. இவற்றில் அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

நிதிநிலையை அறியாமல் தேர்தலின் போது த.வெ.க., வாக்குறுதிகளை அள்ளிவீசியது. இப்போது அரசிடம் நிதி இல்லை என்பதை வெளிப்படுத்தவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளை அறிக்கை காரணங்களை கூறுவதற்காக அல்ல; தீர்வுகளை வழங்குவதற்காக இருக்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *