மன்சூர் அலிகான் தவெகவில் இணைந்தார்
1 min read
Mansoor Ali Khan joins TVK.
20.6.2026
பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் மாற்று கட்சியினர் இணைப்பு விழா நடந்தது. த.வெ.க.வில் இணைந்து அரசியல் பயணத்தின் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார் நடிகர் மன்சூர் அலிகான். அமைச்சர்கள் என். ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார்.
ஆதவ் அர்ஜுனா
இந்த நிகழ்வில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:- “50 ஆண்டுகள் பழமைவாதியான செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியது அதிமுக தலைமையின் தவறு. வந்தால் பதவி தருவோம் என கூறி வியாபாரம் செய்யும் கட்சி தவெக இல்லை. அதிமுகவும் திமுகவும் ஒன்று சேர்ந்துவிட்டனர். அதனால் தான் அதிமுகவினர் தவெகவில் இணைகின்றனர். அதிமுகவின் 90 சதவிகித தொண்டர்கள் தவெகவை நோக்கி வர ஆரம்பித்துவிட்டனர். அதிமுகவும், தவெகவும் எப்போதும் ஒன்று தான். இரு கட்சிகளுக்கும் ஒரே கொள்கைதான்” என்று பேசினார்.
கடந்த வாரம் பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி, அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால் உள்ளிட்ட பலர் கட்சியில் இணைந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.