August 15, 2026

Seithi Saral

Tamil News Channel

தோரணமலையில் யோகாதினம்; மாணவ-மாணவிகள் சாதனை

1 min read

Yoga Day at Thoranamalai; students achieve a feat.

21.6.2026
தோரணமலையில் உலக யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது. மாணவ-மாணவிகள் யோகா செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பிரதமர் மோடியின் முயற்சியின்பேரில் ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி “உலக யோகா தினம்” கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று தோரணமலையில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம்போல் விருட்சபூஜை நடந்தது. அதாவது அடிவார வல்லப விநாயகர் சன்னதிக்குப் பின்புறம் உள்ள அரசு-வேம்பு மரங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதனை அடுத்து கன்னிமாரம்மன் கோவில் மற்றும் சுனைக்கு பூஜை நடந்தது.
இதனை அடுத்து 27 நட்சத்திர விருட்சங்களுக்கு பூஜை நடந்தது. பக்தர்கள் தங்கள் நட்சத்திரத்திற்கு உரிய செடிகளுக்கு மலர் தூவி வணங்கினார்கள்.
அதன்பின் சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையும் சப்தமி திதியும் இணைந்து வந்ததால் இதனை பானுசப்தமி என்று அழைப்பர். மேலும் இது வளர்பிறை சப்தமி என்பதால் கல்யாண சப்தமி என்றும் சொல்வார்கள். இன்றைய தினம் சூரியனை வணங்கினால் திருமணம் கைகூடும். அதோடு கோடி புண்ணியத்தை சூரிய பகவான் அருள்வார் என்பது ஐதீகம். எனவே தோரணமலையில் நடந்த சூரிய வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதனை அடுத்து யோகா தினம் கொண்டாடப்பட்டது.
கராத்தே மாஸ்டர் வேல்முருகன் தலைமையில் மாணவ-மாணவிகள் பல்வேறு யோகா கலைகளை நிகழ்த்தி காட்டினர்.
இந்த யோகாக்களில் பலன்னை வேல்முருகன் விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதனை அடுத்து வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாரம் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
இதற்கான எற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *