July 3, 2026

Seithi Saral

Tamil News Channel

11 வயது சிறுவன் ஓட்டிச்சென்ற வாகனம் மோதி பவுத்த துறவிகள் 8 பேர் பலி

1 min read

8 Buddhist monks killed after being hit by a vehicle driven by an 11-year-old boy.

4.7.2026
தாய்லாந்தில் 11 வயது சிறுவன் ஓட்டிய பிக் அப் டிரக் மோதி 8 பௌத்த துறவிகள் பரிதாபமாகப் பலியான சோகம் அரங்கேறியுள்ளது.

தாய்லாந்தின் உபோன் ராட்சதானி (Ubon Ratchathani) மாகாணத்தில் இருந்து
முக்தஹான் (Mukdahan) மாகாணத்தில் உள்ள டான் டான் (Don Tan) மாவட்டத்தை நோக்கி 35 பௌத்த துறவிகளும், அவர்களது 5 சீடர்களும் என மொத்தம் 40 பேர் நடைப்பயணம் சென்றனர்.

துறவிகள் முக்தஹான் மாகாணத்தில் துறவிகள் சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியே 11 வயது சிறுவன் ஓட்டி வந்த பிக் அப் டிரக் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நேராக துறவிகள் கூட்டத்தின் மீது மோதியது.

மோதிய வேகத்தில் 5 துறவிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாக பலியாயினர்.

படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 3 துறவிகள் உயிரிழந்தனர்.

இதனால் மொத்த பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. படுகாயமடைந்த எஞ்சிய 10 பேருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தை ஏற்படுத்திய 11 வயது சிறுவன், தனது பெற்றோரின் பிக் அப் டிரக் வாகனத்தை அவர்களுக்கு தெரியாமல் ஓட்டி வந்தது தெரியவந்துள்ளது.

சிறுவனை காவல்துறையினர் காவலில் எடுத்துள்ளனர். சிறுவனின் பெற்றோரை காவல் நிலையத்திற்கு அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *