July 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தவெக எம்.எல்.ஏவிடம் பேரம்: மேலும் ஒருவர் கைது

1 min read

Bargaining with TVK MLA: One more person arrested

5/7/2026
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்காக அந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசப்பட்ட விவகாரம் அரசியல் களத்தில் அதிர் வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஊத் தங்கரை த.வெ.க. எம்.எல். ஏ. இளையராஜாவை தொடர்பு கொண்டு சென்னையை சேர்ந்த யூ டியூபரான திருநாவுக்கரசு உங்களுக்கு ரூ.35 கோடி பணம் தருகிறோம். நீங்கள் அதை வாங்கி கொண்டு, கொறடா உத்தரவை மீறி சபாநாயகரின் தீர்மானத் திற்கு எதிராக ஓட்டு போட வேண்டும் என்று ஆசை காட்டியுள்ளனர். அதற்கு உடன்படாத இளையராஜா, அளித்த புகாரின் பேரில் திருவல்லிக் கேணி போலீசார் விசார ணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் திருநாவுக் கரசு உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் குமார் ஆகியோரது தூண்டுதலின் பேரிலேயே பேரம் பேசியதாக கைதா னவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதை தொடர்ந்து செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோரிடமும் விசாரணை நடத்த போலீ சார் முடிவு செய்தனர். அசோக் குமாரின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. செந்தில் பாலாஜியின் பெயர் இன்னும் வழக்கில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும் அவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டதை தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கும் அவரது தம்பிக்கும் போலீசார் சம்மன் அளித்தனர். கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு சென்ற திருவல்லிக்கேணி போலீசார் வீட்டில் இருந்த செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் சம்மனை வழங்கி விட்டு திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் நாளை (6-ந்தேதி) இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவித்தனர்.

இதற்கிடையே, தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஐபிடிஎஸ் திருநாவுக்கரசுவின் வாகன ஓட்டுநரான கிருஷ்ணா என்பவர் கைதாகியுள்ளார். தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *