திருச்செந்தூர் கோவிலில் அமைச்சர் ஆனந்த் சாமி தரிசனம்
1 min read
Minister Anand offers prayers at the Thiruchendur Subramania Swamy Temple.
5/7/2026
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், கடற்கரையில் அமைந்துள்ள முக்கிய ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.இங்கு நாள்தோறும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளராகவும், நீர்வளத்துறை அமைச்சராகவும் என். ஆனந்த் இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். வாரவிடுமுறை தினமான இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.