தமிழை நெஞ்சில் சுமந்து வாழும் பண்பு தொடர வேண்டும்: அண்ணாமலை அறிக்கை
1 min read
The spirit of living with Tamil cherished in one’s heart must continue: Annamalai’s statement.
5.7.2026
உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், தமிழ் மொழியை நெஞ்சில் சுமந்து வாழும் இந்தப் பண்பு என்றும் தொடர வேண்டும் என ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையும் (பெட்னா), நியூஜெர்சி தமிழ்ப் பேரவையும் இணைந்து நடத்திய 39வது தமிழ் விழாவில் பங்கேற்று, தமிழ் வம்சாவளியினருடன் நேரில் சந்தித்து உரையாடியது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லைகளைக் கடந்து, தமிழின் மீதான அவர்களின் அன்பும், பற்றும், அர்ப்பணிப்பும் பெருமைக்குரியது.
தமிழ் மொழி, பண்பாடு, அடையாளம் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கும் உயிர்ப்புடன் கொண்டு செல்லும் இது போன்ற முயற்சிகள், உண்மையிலேயே பாராட்டத்தக்கவை. உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், தமிழ் மொழியை நெஞ்சில் சுமந்து வாழும் இந்தப் பண்பு என்றும் தொடர வேண்டும்.
அன்போடும், உற்சாகத்தோடும் என்னை வரவேற்று, இனிய நினைவுகளைப் பரிசளித்த வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவைக்கும், நியூஜெர்சி தமிழ்ப் பேரவைக்கும், விழாவில் பங்கேற்ற ஒவ்வொரு தமிழ்ச் சொந்தத்துக்கும், என் மனமார்ந்த நன்றிகள். தமிழால் இணைவோம், தமிழால் உயர்வோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.