மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் லண்டன் பயணம்
1 min read
M.K. Stalin travels to London with his family.
4/7/2026
திமுக தலைவர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் லண்டன் புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவரை திமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர்.
லண்டனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (ஜூலை 04) குடும்பத்துடன் புறப்பட்டு சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் செல்லும் ஸ்டாலின், அங்கிருந்து லண்டன் செல்கிறார்.
சென்னை விமான நிலையம் வந்த ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பேரன் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இதற்கிடையே கட்சியினருக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது: நான் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்கிறேன். இரு வாரங்கள் வெளிநாட்டில் இருந்தாலும் அறிவாலயத்தில் தான் என் மனம் இருக்கும்.
இன்று நாட்டில் நடக்கும் காட்சிகளை பாருங்கள், ஒரு சில கட்சிகளால் ஒரு தோல்வியைக்கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. திமுகவை போல் அமைப்பு ரீதியான பலம் கொண்ட வேறு கட்சி இந்தியாவிலேயே கிடையாது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.