July 14, 2026

Seithi Saral

Tamil News Channel

பழனி கோவில் நில விவகாரம்: அமைச்சர் ரமேஷ் விளக்கம்

1 min read

Palani Temple land issue: Minister Ramesh offers clarification.

14.7.2026
அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பழனி கோவில் நில விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது;

“கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலர் கலராக ரீல் சுத்துகின்றனர். இனாம் நிலங்களை கோவில் நிலம் என கூறி வருகின்றனர். இனாம் நிலத்துக்கும், கோவில் நிலத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகின்றனர். இனாம் ஒழிப்பு சட்டத்தின் மூலமாக அந்த இடங்களுக்கு ஏற்கெனவே பட்டா வழங்கப்பட்டுள்ளது. பட்டா வாங்கி 60 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

எனது உறவினர் ஒருவர் ரூ.100 கோடிக்கு நிலம் வாங்கியதாக பொய்ச்செய்தி பரப்புகின்றனர். அரசு மீது ஊழல் கரையை சுமத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றனர். நிலத்தை பதிவு செய்த சார் பதிவாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரூரில் கோவில் நிலங்களை யாருக்கும் பட்டா போட்டு கொடுக்கவில்லை. எங்களுக்கு யாரைப்பற்றியும் கவலையில்லை. கோவில் நிலங்களில் ஒரு இஞ்ச் நிலங்களை யாருக்கும் கொடுக்க எங்களுக்கு விருப்பம் கிடையாது. பொய், புரட்டு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *