The body of the person who died in Vietnam was brought to Tiruvannamalai.
14.7.2026
திருவண்ணாமலையையை சேர்ந்த ரவிசங்கர் வியட்நாம் சுற்றுலா சென்ற போது உயிரிழந்த நிலையில் அவரது உடல் திருவண்ணாமலைக்கு நேற்று கொண்டுவரப்பட்டது. வியட்நாமிற்கு சுற்றுலா சென்ற சுற்றுலா பயணிகள் ஜூலை 11ம் தேதி படகு கவிழ்து விபத்துக்குள்ளானதில் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். இதில், திருவண்ணாமலை ஆனைகட்டி தெருவை சேர்ந்த ரவிசங்கர் (51) என்பவரும் உயிரிழந்தார். இந்தநிலையில், அவரது உடல் நேற்று காலை சென்னை கொண்டுவரப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் திருவண்ணாமலையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசு சார்பில் திருவண்ணாமலை வட்டாட்சியர் சு.மோகனராமன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், ரவிசங்கர் உடலை அவரது குடும்பத்தினர் நேற்று மாலை தகனம் செய்தனர். உயிரிழந்த ரவிசங்கருக்கு காயத்ரி என்ற மனைவியும், ராம்பிரசாத் என்ற மகனும், சொர்ணலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.