நகராட்சி நிர்வாக துறையின் 50 குறுகிய கால டெண்டர்கள் ரத்து
1 min read
50 short-term tenders of the Municipal Administration Department cancelled.
17.6.2027
தமிழகத்தில் 3 நகராட்சிகளில் மட்டும் 35 டெண்டர்களை நகராட்சி நிர்வாகத்துறை ரத்து செய்துள்ளது; உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் விடப்பட்ட பல்வேறு துறைகளின் டெண்டர்களில் முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டதன் அடிப்படையில், அவற்றை தமிழக அரசு அதிரடியாக ரத்து செய்து வருகிறது. இதுவரை பல்வேறு டெண்டர்களை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ரத்து செய்து உள்ளது.
தற்போது தமிழக நகராட்சி நிர்வாக துறையின் கீழ் கோரப்பட்ட 50 குறுகிய கால டெண்டர்களை தவெக தலைமையிலான தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. உடுமலைப்பேட்டை நகராட்சியில் 30 டெண்டர்களும், கோத்தகிரியில் 3 டெண்டர்களும், செங்கத்தில் 2 டெண்டர்களும் என மொத்தம் 35 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இந்த நடவடிக்கை உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் மேற்கொள்ளப்பட்டது என நகராட்சி நிர்வாகத்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்த திடீர் நடவடிக்கை ஒப்பந்ததாரர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.