எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூலை 23-ந் தேதி கடைசி நாள்
1 min read
Red Stethoscope in Shape of Heart Isolated On White Background.
July 23 is the last date to apply for MBBS and BDS courses.
27/7/2026
தமிழ்நாட்டில் 2026-27 கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஜுன் 29-ந் தேதி தொடங்கியது. மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tnmedicalselection.org என்ற இணையதளம் மூலம் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தை இணையவழியில் செலுத்திய பிறகு, தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை முறையாக பதிவேற்றம் செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மருத்துவக்கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஜுலை 23-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணபிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.