திமுக ஆட்சியில் ட்விட் போட்டவர்கள் மீது கூட குண்டாஸ் போடப்பட்டது: அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி
1 min read
Even those who posted tweets during the DMK regime were slapped with the Goondas Act: Minister
20.7.2026
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லை. இந்தத் தேர்வு மாணவர்கள், பெற்றோர்களுக்கு எதிரானது. இந்தத் தேர்வு தேவையில்லை என்பதுதான் தவெக அரசின் நிலைப்பாடு. அதில் மாற்றம் கிடையாது. நீட் தேர்வை மத்திய அரசால் தான் தடுக்க முடியும். கடந்த முறை உதயநிதி ரகசியம் இருக்கிறது என்று சொன்னார். அந்த மாதிரி பொய்யான கருத்தை, வாக்குறுதியை எங்களால் சொல்ல முடியாது. மத்திய அரசு தான் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். விளாத்திகுளம் எம்எல்ஏ, முதல் அமைச்சரை அச்சுறுத்தும் வகையில் பேசினால், சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கத்தான் செய்வார்கள். உங்கள்(திமுக) ஆட்சியில் ட்விட் போட்டதற்காக எத்தனை பேர் மீது குண்டாஸ் போட்டனர். முதல்வரை எதிர்த்து ட்விட் போட்டதற்காக குண்டாஸ் போடப்பட்டது. முதல் அமைச்சருக்கு எதிராக ஒரு வார்த்தை பேசியதற்காக 70 வயது மூதாட்டியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்தது தான் திமுக அரசு
மூன்றாம் நபராக இருந்தால் பரவாயில்லை. எம்எல்ஏ ஒருவர் மேடையில் அவதூறாக மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினால் அது சட்டம் ஒழுங்கு பிரச்னை. மூன்றாம் தரப்பு நபர் சாலையில் பேசினால் விட்டுச் செல்லலாம். எம்எல்ஏ மைக் பிடித்து அனைவர் முன்னால் பேசினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை. அந்த இடத்தில்,பொது மக்கள், தவெகவினர் கேட்கும் பட்சத்தில் பெரிய கைகலப்பு தான் உருவாகும். சட்டப்படி நடைபெற்றுள்ளது. இதில் எந்த விதிமீறலும் இல்லை. கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினால் வழக்குகள் வரத்தன் செய்யும்.
மாப்பிள்ளை, மகன், முதல்வரை சொன்னால் குண்டாஸ் போட்டனர். கொலை மிரட்டல் முதல்வர் மீது விடுக்கப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர், நிர்வாகிகள் விலகி வந்தால் குதிரை பேரம் என்றால் எப்படி ? எங்கள் எம்எல்ஏவிடம் பேரம் பேசினார்கள். பணம் பிடிபட்டுள்ளது. பேசியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பேசிய ஆடியோ உள்ளது.நாங்கள் யாரிடமாவது பேசி உள்ளோமா? எந்த உத்தரவாதம் எதும் கிடையாது. அவர்களாக விரும்பி, வந்துள்ளனர். எங்கள் எம்எல்ஏவிடம் பேசியது தான் குதிரை பேரம் “
இவ்வாறு அவர் கூறினார்.