August 1, 2026

Seithi Saral

Tamil News Channel

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளம் -குளிக்க தடை

1 min read

loodwaters in all waterfalls at Courtallam – bathing prohibited.

1.8.2026
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் கடந்த சில வாரங்களாக சாரல் மழை இல்லை இதனால் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து கணிசமாகக் குறைந்நது. இதனால் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக வரிசையில் நின்று குளிக்க அனுதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாகக் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவி சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து.இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

ஆனால் பழைய குற்றாலம் அருவி, புலி அருவி, மற்றும் சிற்றருவில் தண்ணீர் சற்று குறைவாக விழுந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குறறாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை விதித்தனர்.

அதே நேரத்தில் பழைய குற்றாலம் அருவி, புலி அருவி மற்றும் சிற்றருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இரவில் பெய்த தொடர் மழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்ப்பட்டது.

இதனால் நேற்று காலை முதல் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து அருவி பகுதிகளிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துத் தடை விதிக்கப்பட்ட நிலையில், மாலையில் நீர்மட்டம் சீரானதால் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அருவிகளுக்கு வரும் நீரின் அளவு ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது.

எனவே பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிப்பதற்கு வனத்துறை மற்றும் காவல் துறையினர் மீண்டும் தடை விதித்துள்ளனர். அருவிப் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. ஆனாலும் சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டதால் அருவிகளில் கொட்டும் தண்ணீரை வேடிக்கை பார்த்து கொண்டே ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *