பாவூர்சத்திரத்தில் காமராஜர் பிறந்த தினவிழா பேச்சு போட்டி
1 min read
Kamarajar’s Birth Anniversary Speech Competition in Pavoorchatram
1.8.2026
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் காமராஜர் பிறந்த தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கலைகதிரவன் பரிசுளை வழங்கி பாராட்டினார்.
பாவூர்சத்திரத்தில் காமராஜரின் 124 வது பிறந்தநாளையொட்டி இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடைபெற்றது. காமராஜர் இளைஞர் சங்கம் சார்பாக 2ம் ஆண்டாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு காமராஜர் இளைஞர் சங்க செயலாளர் சேர்மராஜா தலைமை வகித்தார். துணைச் செயலாளர் அருணா, இந்து, சின்னத்துரை வரவேற்றார். பெருந்தலைவர் மக்கள் கட்சி உயர்நிலைக்குழு உறுப்பினர் அச்சுதன் நாடார் சிறப்புரை ஆற்றினார். திருநெல்வேலி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதி மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர். டாக்டர் கலைகதிரவன், முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் ஆகியோர் பங்கேற்று பரிசு, கேடயம் வழங்கி பாராட்டினர்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆலங்குளம் செல்வராஜ், மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் சிவக்குமார், த.வெ.க மத்திய மாவட்ட செயலாளர் ராஜபிரகாஷ், மாவட்ட பைனான்ஸியர்கள் சங்க துணைத்தலைவர் ஐயப்பன், அனைத்திந்திய பாண்டிய சான்றோர் முன்னேற்ற கழக நிறுவனர் மணிமாறன் நாடார் கல்லூரணி ஊராட்சி தலைவர் ராஜ்குமார், மாவட்ட பெருந்தலைவர் காமராஜர் இளைஞர் சங்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளர்கள் கனகராஜ், விக்னேஷ்வரன், ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் பாண்டியராஜன், சிலம்பம் ஐயப்பன், முருகன் , கபில்ராஜ், கணேசமூர்த்தி, சத்தியராஜ், ஆறுமுகனேரி செந்தில்ராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சுடலைகனி
அனைவருக்கும் நன்றி கூறினார்.