August 3, 2026

Seithi Saral

Tamil News Channel

காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

1 min read

Cauvery Issue: Tamil Nadu Government Files Case in Supreme Court

3.8.2026
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜயின் அறிவுறுத்தலின்படி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய நீரை கர்நாடகம் அளிக்க தவறி விட்டது.

26.954 டி.எம்.சி. நீரை கர்நாடகம் தமிழகத்திற்கு தந்திருக்க வேண்டும்.
தமிழகத்திற்கு உரிய நேரத்தில் காவிரியில் கர்நாடக அரசு நீரை திறந்து விடவில்லை.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தவிட்ட பிறகும் பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு அதிகபட்சமாக 550 கனஅடி நீர் தான் வருகிறது.
ஆகஸ்டு 3-ந் நிலவரப்படி கேஆர்எஸ் அணையில் 23 டிஎம்சியும், கபினி அணையில் 18.6 டிஎம்சியும், ஹாரங்கியில் 7.8 டிஎம்சியும், ஹேமாவதி அணையில் 28 டிஎம்சி என மொத்தம் 77.53 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

77.53 டிஎம்சி தண்ணீர் உள்ளதால் விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பதில் கர்நாடகாவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை.

காவிரியில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 3500 கன அடி நீர் திறக்க கர்நாடகாவிற்கு மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு அதிகபட்சமாக 550 கனஅடி நீர் தான் வருகிறது.
தமிழ்நாட்டிற்கு விகிதாச்சாரப்படி கிடைக்கவேண்டிய நீர் 26.954 டிஎம்சி.

உரிய நேரத்தில் தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *