August 3, 2026

Seithi Saral

Tamil News Channel

கேரளத்தில் மேக வெடிப்பு ஏற்பட வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

1 min read

Meteorological Department warns of possible cloudburst in Kerala.

3.8.2026
கேரளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோட்டயம், பத்தனம்திட்டா. ஆலப்புழை போன்ற மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பல இடங்களில் சாலைகளையும், பாலங்களையும் மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மத்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அவசர எச்சரிக்கை செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கேரளத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் மாநிலத்தில் பல இடங்களில் மேக வெடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழை, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு. மலப்புரம் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 12 மாவட்டங்களுக்கு தீவிர மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.இந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 115 மி.மீ. முதல் 204 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 115 மி.மீ. முதல் 204 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கனமழை காரணமாக கண்ணூர், பத்தனம்திட்டா மாவட்டங் களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் (திங்கட்கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளது.

=
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 116 அடியாக உயர்வு

இடுக்கி,ஆக.4-
தமிழக-கேரளம் மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந் துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாத புரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத்தின் முக்கிய ஆதார மாக விளங்கி வருகிறது. அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்க ரில் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் மாத முதல் வாரத்தில் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் இதுவரை தண்ணீர் திறக்கப்பட வில்லை.

இந்தநிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளம் மாநிலம் பெரியாறு, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,650 கனஅ டியில் இருந்து 6,100 கனஅடியாக அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை 113.70 அடியாக இருந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் ஞாயிறு அன்று அணையின் நீர் மட்டம் 116.70 அடியாக உயர்ந்தது. இதன் மூலம் ஒரே நாளில் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அணையில் 2,033 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இருப்பினும், பாசனத்துக்கு இது வரை தண்ணீர் திறக்கப்படவில்லை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *