August 3, 2026

Seithi Saral

Tamil News Channel

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

1 min read

Supreme Court refuses to stay the High Court order regarding the lighting of the *Deepam* at Thiruparankundram

3.8.2026
திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் கடந்​தாண்டு டிசம்பர் 3-ந் தேதி தீபம் ஏற்​றக்கோரி மதுரையைச் சேர்ந்த ராமரவி​கு​மார் உள்​ளிட்​டோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனுத்தாக்​கல் செய்தனர். அந்த மனுக்​களை விசா​ரித்த சென்னை உயர்நீ​தி​மன்ற தனி நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், தீபத்​தூணில் கார்த்திகை திரு​நாள் அன்று தீபம் ஏற்ற வேண்​டுமென கடந்த 2025 டிச.1-ல் உத்​தர​விட்டார்.

ஆனால், இந்த உத்​தரவு நிறைவேற்​றப்​ப​டாத நிலை​யில்,மதுரை மாவட்ட ஆட்​சி​யர், மாநகர் காவல் ஆணை​யர் மற்​றும் கோயில் செயல் அலு​வலர் ஆகியோ​ருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தொடரப்​பட்​டது. இதையடுத்து ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், செயல் அலு​வலர் ஆகியோர் நீதி​மன்​றத்​தில் ஆஜராகி நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்​றாததற்​காக வருத்​தம் தெரி​வித்​தனர்.

இதனைதொடர்ந்​து, தனி நீதிபதி உத்​தரவை எதிர்த்து தமிழ்​நாடு அரசும், அவம​திப்பு நடவடிக்​கையை எதிர்த்து அதி​காரி​களும் உயர் ​நீ​தி​மன்ற மதுரை அமர்​வில் மேல்​முறை​யீடு செய்​தனர். அந்த மேல்​முறை​யீட்டு மனுக்​களை விசா​ரித்த மதுரை அமர்வு, அதி​காரி​களுக்கு எதி​ரான நீதி​மன்ற நடவடிக்​கைக்கு தடை​வி​தித்து உத்​தர​விட்​டது. அதே வேளை​யில், ஒவ்​வொரு ஆண்​டும் கார்த்​திகை திரு​நாளன்று திருப்​பரங்​குன்​றம் மலை​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என்று தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை உறுதி செய்​தது.

இதனையடுத்​து, தனி நீதிப​தி​யின் உத்​தரவை உறுதி செய்து மதுரை அமர்வு பிறப்​பித்த உத்​தர​வுக்கு எதி​ராக கோயில் நிர்​வாகம் தரப்​பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இதேபோல் தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் பி.கருணாகரனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கவும், அந்தத் தீர்ப்புக்கு முன்பு பின்பற்றப்பட்ட நடைமுறையின்படியே கார்த்திகை தீபத் திருவிழாவை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அர்விந்த் குமார், வி.எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தீபத்துாணில் தீபம் ஏற்றும்படி ஐகோர்ட் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசின் கோரிக்கையை, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நிராகரித்தனர். மேலும் நீதிபதிகள் கூறிய; தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான மனுக்கள் முழுமையாக விசாரித்த பிறகு தான் எந்த முடிவும் எடுக்கப்படும். தீபத்தூணில் தீபம் ஏற்ற ஜனவரி மாதம் ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்ட நிலையில் 6 மாதம் கழித்து அப்பீல் செய்வது ஏன்? தமிழக அரசின் மேல்முறையீடு குறித்து பதில் அளிக்குமாறு மனுதாரர் ராம ரவிக்குமார், மதுரை கலெக்டர் பதில் அளிக்க சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *