இரு விஜயபாஸ்கருக்கும் தவெகவில் முக்கிய பொறுப்பு
1 min read
Both Vijayabhaskars to hold key positions in TVK.
8.8.2026
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இபிஎஸ் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால், கட்சியில் இருந்து விலகினர். அதன்பிறகு, பிரமாண்ட விழா நடத்தி இருவரும் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர். இதையடுத்து, இருவருக்கும் கட்சியில் எந்தப் பொறுப்பும் வழங்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், இருவருக்கும் கட்சிப் பொறுப்புகளை வழங்கி தவெக தலைவரும், முதல்வருமான விஜய் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு செயலாளராக சி.விஜயபாஸ்கரும், கரூர் மாவட்ட அமைப்பு செயலாளர் மற்றும் தவெக துணைப் பொதுச்செயலாளராக எம்.ஆர்.விஜயபாஸ்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, தென்காசி மாவட்ட அமைப்பு செயலாளராக இசக்கி சுப்பையாவை நியமித்து முதல்வர் விஜய் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.