காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
1 min read
Prime Minister Modi pays tribute at the Gandhi memorial.
15.8.2026
இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று இறையாண்மை அடைந்து 79 ஆண்டுகள் ஆன நிலையில், தனது 80வது சுதந்திர தினத்தை இன்று (ஆகஸ்ட் 15, 2026) கொண்டாட்டது.
சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றினார்.
அதனைத் தொடர்ந்து, அவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் பாரம்பரியமாக மலர்களைத் தூவும் நிகழ்வைத் தொடர்ந்து, அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுறினார்.
அதன்பின், 2,500 என்.சி.சி. மாணவர்களும் ‘மை பாரத்’ தொண்டர்களும் ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடினார்கள். அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
முன்னதாக இன்று காலையில், டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.