அசாமில் டிரோன்கள் மூலம் தபால் விநியோகம் தொடக்கம்
1 min read
Mail delivery via drones begins in Assam.
15.8.2026
அசாமில் அஞ்சல் துறை சேவைகளை நவீனப்படுத்தும் வகையில், கிளை அஞ்சலகங்களுக்கு தபால் பைகளை டிரோன்கள் மூலம் எடுத்து செல்லும் புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கடினமான நிலப்பரப்புகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு அஞ்சல்களை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையில் இந்த டிரோன் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளிலும் அஞ்சல் சேவையை திறம்பட வழங்க முடியும்.
வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும் அஞ்சல்கள் தடையின்றி சென்றடையும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், அசாம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் முழுவதும் மொத்தம் 150 டிரோன் வழித்தடங்கள் உருவாக்கப்படுகின்றன.