August 15, 2026

Seithi Saral

Tamil News Channel

தூத்துக்குடி: இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து வலைதளங்களில் பகிர்ந்த வாலிபர் கைது

1 min read

Thoothukudi: Young man arrested for sharing an obscene depiction of a young woman on social media

15/8/2026
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த சிந்தா மதார் சாகிப் மகன் முகமது ரிச்வி (வயது 25). இவர் 25 வயது பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த செயலைப் பற்றி அறிந்த அந்த இளம்பெண்ணும், அவரது தந்தை சுலைமானும் முகமது ரிச்வியின் வீட்டிற்கு சென்று தட்டிக் கேட்டுள்ளனர். அப்போது, அவர்கள் 2 பேரையும் முகமது ரிச்வி அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், ஆறுமுகனேரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ரிச்வியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *