இந்தியாவில் தத்தெடுத்து நெதர்லாந்தில் சகோதரி என்று தெரியாமல் தோழிகளாக வளர்ந்தவர்கள்
1 min read
Two girls adopted in India and raised as friends in the Netherlands, unaware that they were sisters
15.8.2026
இந்தியாவில் இருந்து கடந்த 40 வருடங்களுக்கு முன்பாக இரண்டு குழந்தைகளை நெதர்லாந்தைச் சேர்ந்து இரண்டு வெவ்வேறு குடும்பங்கள் தத்தெடுத்துள்ளனர்.
இருவரும் நெதர்லாந்தில் வளர்ந்து வந்துள்ளனர். சுமார் 160 கி.மீ. இடைவெளி தூரம் கொண்ட இடத்தில் வசித்து வந்தனர். 1996-ம் ஆண்டு தத்து எடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அந்த நகிழ்ச்சியில் மீனா கெல்டிங் என்பவரும், மினல் திஜ்சென் என்பவரும் கலந்து கொண்டனர்.
இருவரும் அந்த நிகழ்ச்சியில் சந்தித்த உடன் இருவருக்கும் இடையில் சிறந்த பிணைப்பு ஏற்பட்டது. அத்துடன் இருவரும் ஒரே மாதிரியாக இருந்ததாக அவர்களுடன் நண்பர்கள் கண்டனர். இருவரும் மாறிமாறி தங்களை சகோதரிகள் என்று அழைத்துக் கொண்டு முகவரியை பரிமாற்றிக் கொண்டனர்.
கடந்த 15 வருடத்திற்கு முன்னதாக இருவருக்கும் இடையிலான தொடர்பு தடைபட்டது. இதில் 44 வயதாகும் மினல் திஜ்சென் பிரான்ஸ் நாட்டில் தனது கணவனர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மீனாவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் மைஹெரிடேஜ் டிஎன்ஏ (MyHeritage DNA) பரிசோதனைக்கான முடிவு கிடைத்தது. தனது மூதாதையர்களை கண்டறிவதற்கான சோதனைக்கு மைஹெரிடேஜ் டிஎன்ஏ டெஸ்ட் எனப் பெயர்.
இவருடைய டி.என்.ஏ. டெஸ்ட் மீனா கெல்டிங் உடன் 100 சதவீதம் பொருத்தமாக இருந்துள்ளது. தனது டி.என்.ஏ. சோதனை 100 சதவீதம் பொருந்தியது. ஏற்கனவே இளம் வயதில் சந்தித்த பெண் தோழி என்பதை மினால் அறியவில்லை.
இறுதியில் அவள் சமூக ஊடகங்களில் மீனாவைக் கண்டுபிடித்து, பழைய புகைப்படங்களை வைத்து அவளை அடையாளம் கண்டுகொண்டாள். என்னால் அதை நம்பவே முடியவில்லை மினால் கூறினார்.
இரு பெண்களும் அன்பான வளர்ப்பு குடும்பங்களில் வளர்ந்திருந்தாலும், தங்கள் உயிரியல் அடையாளங்கள் குறித்து கேள்விகளையும், ஏதோ ஒன்று குறைவது போன்ற உணர்வையும் கொண்டிருந்ததாகக் கூறினர். டிஎன்ஏ முடிவுகளுக்குப் பிறகு நெதர்லாந்தில் அவர்கள் மீண்டும் இணைந்தபோது, அந்தச் சகோதரிகள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து, சிரித்து, ஒன்றாக அழுதனர். சகோதரிகளாகத் தங்களின் முதல் செல்ஃபியையும் எடுத்துக் கொண்டனர்.
“உன்னைப் பார்க்கும்போது, நான் என் வீட்டில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக என் இதயத்தில் ஒரு வெற்றிடம் இருந்ததை நான் உணர்ந்தேன். அது, காணாமல் போன ஒரு புதிர் விளையாட்டுத் துண்டு (puzzle piece) கிடைத்துவிட்டது போன்றது,” என்று மீனா கூறினார்.
“நாங்கள் சகோதரிகளாக மாறுவதற்கு முன்பே தோழிகளாக இருந்தோம். உண்மையில் நாங்கள் எப்போதும் சகோதரிகளாகவே இருந்தோம், ஆனால் அது எங்களுக்குத் தெரியவில்லை,” என்று மினல் கூறினார்.