August 17, 2026

Seithi Saral

Tamil News Channel

திருமணம் செய்வதாகக் கூறி, பெண் வழக்கறிஞரை ஏமாற்றிய நாகர்கோவில் வக்கீல் கைது

1 min read


Nagercoil lawyer arrested for deceiving a female lawyer under the pretext of marriage.

17.8.2026
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பெண் வழக்கறி ஞர் ஒருவரைத் திருமணம் செய்வதாகக் கூறி, நகை மற் றும் பணத்தைப்பறித்துக் கொண்டு அவரை ஏமாற்றிய புகாரில், நாகர்கோவிலைச் சேர்ந்த வழக்கறிஞர் சகாய அரசு என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நெல்லைமாவட்டத்தை சேர்ந்த அந்தப்பெண் வழக்கறிஞர், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சகாய அரசு என்பவருடன் தனக்குப்பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கத்தைப் பயன்படுத்தி சகாய அரசு தன்னிடம் அத்து மீறி நடந்து கொண்டதாகவும், தன்னைத்திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நகை மற்றும் பணத்தைப் பறித்ததோடு, தகாத உறவிலும் ஈடுபட்டதாக அவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்தப்புகார் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு நாகர்கோவில் மகளிர் காவல் நிலையத்திற்கு உத் தரவிடப்பட்டது. இதன்
அடிப்படையில் மகளிர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். புகாரில் கூறப்பட்ட தகவல்கள் உண்மையானவை என்று தெரியவந்ததை அடுத்து. வழக்கறிஞர் சகாய சகாய அரசை போலீசார் நேற்று காலையில் அதிரடியாக கைது செய்தனர்.

இந்த வழக்கில், புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா கீழ் பல்வேறு கடுமையான பிரிவுகளில் வழக்குப்ப திவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பாலியல் துன் புறுத்தல், பின்தொடர்ந்து தொல்லை கொடுத்தல், ஏமாற்றுதல், திருமண வாக்குறுதி அளித்து ஏமாற்றுதல், தவறான உள்நோக்கத்துடன் செயல்படுதல் மற்றும் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட
குற்றங்களுக்காக வழக்குப்ப திவு செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சகாயஅரசை நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு
கொண்டுசென்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதன்பின்னர், அவர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி. அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் நாகர்கோவில் சிறையில் அடைக் கப்பட்டார்.

சக வழக்கறிஞர் மீதே பெண் வழக்கறிஞர் புகார் அளித்து, அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோவில் நீதிமன்ற வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *