August 26, 2026

Seithi Saral

Tamil News Channel

ராஜஸ்தான் மந்திரிக்கு பன்றிக்காய்ச்சல்

1 min read

Rajasthan Minister contracts swine flu

26.8.2026
இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் அதிகரித்து வருகிறது. பன்றிக்காய்ச்சல் என்பது பன்றிகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய ஒரு வைரஸ் தொற்றாகும். இந்த வைரஸ் தொற்று மனிதர்களுக்கு இடையே வேகமாக பரவும் தன்மை கொண்டது.

இதனிடையே, ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில வேளாண் மந்திரியாக கிரோடி லால் மீனா (வயது 74) செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், மந்திரி கிரோடி லால் மீனாவுக்கு கடந்த சில நாட்களுக்குமுன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை நடத்திய டாக்டர்கள் மந்திரிக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மந்திரி கிரோடி லால் மீனாவின் உடல்நிலை மோசமடைந்து வரும் நிலையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *