வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் உருவாகும் அர்னாப் புயல்
1 min read
Government order issued to provide 50,000 new electricity connections to farmers..
24.10.2026
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.
நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5:30 மணிக்கு வலுவடைந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாற வாய்ப்பு உள்ளது. நாளை (அக்டோபர் 25) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக் கடலில் உருவாகக்கூடும்.
நாளை உருவாகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திங்களன்று அர்னாப் புயலாக உருவெடுக்கும். அடுத்த 48 மணி நேரத்தில் அர்னாப் புயல் உருவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அர்னாப் புயல் வரும் 28ம் தேதி காலை ஆந்திர கடலோர பகுதிகளை நெருங்க வாய்ப்புள்ளது.