நேபாள வெள்ளம்: தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேர் பத்திரமாக மீட்பு
1 min read
Nepal floods: 21 people from Tamil Nadu rescued safely.
27.6.2026
நேபாளம் – திபெத் எல்லையில் நேற்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால், பிரமாண்ட பனிப்பாறை சரிந்து போதேகோசி நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த அதிபயங்கர வெள்ளப்பெருக்கில், ஆற்றின் கரையோர கட்டிடங்கள், பாலங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை கண்இமைக்கும் நேரத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்திருக்கும் நிலையில், மேற்கொண்டு ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. காயம் அடைந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கி 288 இந்தியர்கள் மாயமாகி உள்ளதாகவும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், திபெத்தில் உள்ள சுமார் 200 இந்தியர்களும் இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில், நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு வெள்ளத்தில் சிக்கிய கயிலாய மானசரோவர் யாத்திரை சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்புப் பட்டியலில் இடம்பெற்ற தமிழர்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள நபர்களின் பெயர்கள் பின்வருமாறு;-
- சிவரஞ்சனி முத்துநாதன்
- கற்பகம் ராஜமோகன்
- மாறன் கோவிந்தசாமி
- சாந்தி மாறன்
- முத்துக்குமரேசன் ராமலிங்கம்
- நாவு கபீர்தாஸ்
- விஜயபுவனேஸ்வரி விஸ்வநாதன்
- மைதிலி முத்துக்குமரேசன்
- தியாகராஜன் ரத்தினம்
- கிருபாகரி பாலசுப்ரமணியம்
- வள்ளிநாயகி சிவகுமார்
- சத்திய ஜெயராமன்
- திருமாவளவன் கோவிந்தராசு
- கனகசபை நடேசபிள்ளை
- ராதை கனகசபை
- ரத்தினகுமார் குஞ்சிதபாதம்
- பூங்குழலி பொன்னம்பலம்
- பழனியப்பன் மைக்கப்பெருமாள்
- கலைமதி பழனியப்பன்
- ரகுநாதன் முனிராஜ்
- கனகசபை நடேச பிள்ளை