August 28, 2026

Seithi Saral

Tamil News Channel

சீனாவில் அஜித் தோவல்: இந்தியா – சீனா எல்லை நிர்ணயத்தில் உடன்பாடு

1 min read

Ajit Doval in China: Agreement reached on India-China border demarcation.

28.8.2026
இந்தியா – சீனாவுக்கு இடையே எல்லை மோதல் நீண்ட காலமாக நீடித்து வருகிறது. கடந்த 2019 இல் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சீன வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கில் புகுந்து நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து சீனாவுடனான இந்தியாவின் உறவு பின்னடைவை சந்தித்த நிலையில் அந்த கசப்புகளை மறந்து பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின் பிங் சந்திப்பு 2025 ஷாங்காய் உச்சிமாநாட்டில் நடைபெற்றது.

முன்னதாக எல்லைக் கோட்டில் இரு நாட்டு வீரர்களும் இதன்முன் தாங்கள் இருந்த நிலைகளுக்கு திரும்புவதாக 2024 இல் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இருந்தபோதும் லடாக் உள்ளிட்ட எல்லைகளில் சீனா, தனது ராணுவ இருப்பை தொடர்ந்து அதிகப்படுத்தியும், ராணுவ கட்டமைப்புகளை மேற்கொண்டும், இமாச்சல பிரதேசத்தின் பகுதிகளை தங்களின் நாட்டு பகுதிகளாக வரைபடம் வெளியிட்டும் இந்தியாவுக்கு அச்சறுத்தலாக இருந்து வருகிறது.

இந்த சூழலில் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் பங்கேற்ப்பார் என கூறப்படுகிறது.

இதனிடையே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் எல்லை பிரச்சனை மற்றும் இரு நாட்டு உறவுகள் குறித்து பேச சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார்.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் தகவலின்படி, ஆகஸ்ட் 25 அன்று பெய்ஜிங்கில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற 25வது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது சில உடன்பாடுகள் எப்பட்டுள்ளன.

எல்லைப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 3,488 கி.மீ நீளத்திற்கு ‘எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு’ மட்டுமே உள்ளதே தவிர, இரு நாடுகளும் கூட்டாக ஏற்றுக்கொண்ட நிலையான எல்லைக்கோடு இல்லை.

எல்லையை துல்லியமாக நிர்ணயிப்பதுகுறித்து அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் ஆலோசித்துள்ளனர்.

வரைபடத்தில் எந்தெந்த நிலப்பரப்பு யாருக்குச் சொந்தம், எல்லைக்கோடு எங்கு அமையும் என்பதைப் பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பிரச்சனை தொடர்பாக சிறப்புப் பிரதிநிதிகள் மட்டத்திலான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையை 2027இல் இந்தியாவில் நடத்துவதற்கும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் எழும் சிக்கல்களுக்கு ராணுவ தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்.

எல்லையின் கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையே மேலும் இரண்டு புதிய ராணுவ ஹாட்லைன் தொடர்பு வழிகள் நிறுவப்படும்.

குறிப்பிட்ட 3 எல்லை வர்த்தக மையங்களை மீண்டும் திறப்பதை இரு தரப்பும் வரவேற்றதோடு, எல்லை வர்த்தகம் மற்றும் புனிதப் பயணங்களை வலுப்படுத்தவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

2024 இல் இரு நாட்டு படைகளையும் அதன் முந்தைய நிலைகளுக்கு திரும்பச் செய்வதாக ஒப்புக்கொள்ளப்பட்ட பின்னர் அஜித் தோவல் மற்றும் வாங் யி சந்திப்பது இது மூன்றாவது முறையாகும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *