August 28, 2026

Seithi Saral

Tamil News Channel

ஒலிம்பிக்கில் அதிக விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்பதில்லை- பிரதமர் மோடி கவலை

1 min read

Prime Minister Modi expresses concern over India not participating in many sports at the Olympics.

28.8.2026
‘கேலோ இந்தியா’ கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கூடியிருந்த விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், தன்னார் வலர்களிடம் காணொலி வாயிலாக பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஆகஸ்டு 15-ந்தேதி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில், விளையாட்டுத் துறை சார்ந்த மிகப்பெரிய சவால்கள் குறித்தும் பேசி நாட்டின் கவனத்தை ஈர்த்தேன். இந்த சவால் ஒலிம்பிக் போட்டிகளுடன் தொடர்புடையது. ஒலிம்பிக்கில் இடம் பெறும் பல்வேறு விதமான விளையாட்டுகளில் இந்திய அணிகள் பாதி எண்ணிக்கையிலான போட்டிகளில் கூட பங்கேற்ப தில்லை என்பதே கசப்பான உண்மை. அதாவது பதக்கப்பட்டியலில் அதிக பங்களிப்பை அளிக்கக்கூடிய போட்டிகளில் நாம் கலந்து கொள்வது கூட கிடையாது. இது ஆண்டாண்டு காலமாக தொடருகிறது. 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியா 13 விளையாட்டுகளில மட்டுமே கலந்து கொண்டது. 20-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில் அந்த 20 விளையாட்டுகளில் நாம் கேள்விப்பட்டிராத நாடுகள் கூட களம் இறங்கி பதக்கத்தை வென்றது.

ஒலிம்பிக்கில் பதக்க எண்ணிக்கையை அதிகரிக்க அந்த விளையாட்டுகளிலும் நாம் சிறந்து விளங்க வேண்டும். உதாரணமாக அலைச்சறுக்கு மற்றும் மலையேற்ற போட்டிகளை சொல்லலாம். நமக்கு நீண்ட கடற்கரை பகுதியும், பரந்த மலைப்பகுதிகளும் உள்ளன. நீர்சார்ந்த விளையாட்டுகள் முதல் பனிச்சறுக்கு போன்ற குளிர்கால விளையாட்டுகள் வரை அனைத்துக்கும் ஏற்ப மக்கள் வளமும், புவியியல் சூழலும் நம்மிடம் உள்ளன. ஆனால் உலக அளவில் இத்தகைய விளையாட்டுகளில் நமது பங்களிப்பு பெரிதாக இல்லை. எனவே இத்தகைய விளையாட்டுகளுக்கான சூழலை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து, அதை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு நாம் தயாராவது பற்றி பேசும் போது, அந்த போட்டிக்கு தகுதி பெறக்கூடிய வீரர்களை இப்போதே கண்டறிந்து அவர்களை தயார்செய்வதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதனால் தான் 5 முதல் 15 வயதுக்குட்பட்ட திறமையான வீரர்களை அடையாளம் காணும் ஒரு மாபெரும் திறமை தேடல் பிரசாரத்தை சுதந்திர தின விழாவில் அறிவித்தேன். இதிலும் கூட ஒரு குழந்தைக்கு எந்த விளையாட்டில் ஆர்வம் உள் ளது என்பதை மட்டும் பார்க்காமல் எந்த விளையாட்டுக்கு அவர்கள் மிகவும் பொருத்தமானவர்கள் என்பதை கவனத் தில் கொண்டு அதற்கு ஏற்ப அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

அரசாங்கத்திடம் இருந்து உங்களுக்கு எத்தகைய ஆதரவு தேவைப்பட்டாலும். அதனை அளிக்க தயாராக இருக்கி றோம். 21-ம் ஆண்டுக்கு ஏற்ற நவீன விளையாட்டு சூழலை உருவாக்குவதில் அரசு முழு உறுதியுடன் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *