September 3, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் கூடுதலாக 29,108 போலீஸ் பணியிடங்கள் உருவாக்கப்படும்

1 min read

An additional 29,108 police posts will be created in Tamil Nadu.

3/9/2026
தமிழகத்தில் கூடுதலாக 29,108 போலீஸ் பணியிடங்கள் உருவாக்கப்படும்; 5 ஆயிரம் பெண் போலீசார் உள்பட 10 ஆயிரம் போலீசார் இந்த ஆண்டில் நியமனம் செய்யப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் காவல்துறை மீதான மானிய கோரிக்கையை முதல்வர் விஜய் தாக்கல் செய்தார். அவர் வெளியிட்ட றிவிப்புகள் பின்வருமாறு:

  • தமிழகத்தில் கூடுதலாக 29,108 போலீஸ் பணியிடங்கள் உருவாக்கப்படும்.
  • 5 ஆயிரம் பெண் போலீசார் உள்பட 10 ஆயிரம் போலீசார் இந்த ஆண்டில் நியமனம் செய்யப்படும்.
  • கூடுதல் போலீஸ் பணியிடங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும்.
  • காவல்துறையை நவீனமயமாக்க ரூ.212 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • போலீஸ் ஸ்டேஷன்களுக்கு சில்லறை செலவினம் உயர்த்தி வழங்கப்படும்.
  • சேலம் மற்றும் விழுப்புரத்தில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் ரூ.14 கோடியில் டிஎன்ஏ பரிசோதனை மையம் அமைக்கப்படும்.
  • போதைப் பொருள் பயன்பாட்டை வெற்றிகரமாக ஒழிக்கும் கிராமம் ஒன்றுக்கு 10 லட்ச ரூபாய் வீதம் 50 கிராமங்களுக்கு வழங்கப்படும்.
  • பணியின் போது துணிச்சலாக பணியாற்றி உயிரிழக்கும் போலீஸ்காரர் குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும்.
  • பணிக்காலத்தில் இறக்கும் போலீஸ்காரர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை 30 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • 200 கோடி ரூபாய் செலவில் போலீசாருக்கு புதிய வாகனங்கள் வழங்கப்படும்.
  • செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தடயவியல், நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் நவீன கட்டுப்பாட்டு மையங்கள் உருவாக்கப்படும்.
  • தமிழக போலீஸ் அகாடமியில் ரூ.23 கோடி செலவில் நவீன விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
  • 6 இடங்களில் ரூ.16 கோடி செலவில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்கள் அமைக்கப்படும். 10 இடங்களில் 131 புதிய குடியிருப்புகள், ரூ.80 கோடி செலவில் கட்டப்படும்.

இவ்வாறு முதல்வர் விஜய் அறிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *