September 6, 2026

Seithi Saral

Tamil News Channel

நேபாள வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 1,290 ஆக உயர்வு

1 min read
Nepal floods: Death toll rises to 1,290.
4/9/2026
திபெத்- நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,290 ஆக உயர்ந்துள்ளது.

திபெத்- நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 26-ந்தேதி அன்று பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் பல பேர் சிக்கி உயிரிழந்தனர். மீட்பு பணியின்போது தொடர்ந்து சடலங்கள் மீட்கப்படுகின்றன. உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 1,290 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இந்த இயற்கைச் சீற்றத்தில் சிக்கி, இந்தியர்கள் 275 பேர் உட்பட 4,700-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் நேபாள ராணுவத்தினர் மற்றும் சர்வதேச பேரிடர் மீட்புக் குழுவினர் உட்பட 21,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மலைக்கிராமங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் வேட்டை தடையின்றி நடந்து வருகிறது.

இந்நிலையில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நீர்மின் நிலையத்தின் சுரங்கப் பாதைக்குள், கடந்த 9 நாட்களாக சிக்கியிருந்த 2 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் மீட்புக் குழுவினரிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய நதிகளில் ஏற்பட்ட இந்த ராட்சத வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்து 10-வது நாளாக இன்றும் மீட்புப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்றன.

மீட்புப் பணிகளை விரைவுபடுத்த, இந்தியாவின் சார்பில் டிஎன்ஏ தடயவியல் பரிசோதனைக் கருவிகள், அவசர கால மருத்துவப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் இந்திய விமானப்படையின் சி-130ஜே சிறப்பு விமானங்கள் மூலம் நேபாளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தொடர் மழை மற்றும் உடல்களை அடையாளம் காண்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, மீட்புப் பணிகளிலும், இறுதிச் சடங்குகளை நிறைவேற்றுவதிலும் தொடர்ந்து தாமதம் நிலவி வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *