September 7, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட வில்லிசை கலைஞர்கள் சங்க முப்பெரும் விழா

1 min read

Grand Tripartite Event of the Tenkasi District Villisai Artists’ Association

7.9.2026
தென்காசி மாவட்டம் வில்லிசை நையாண்டி மேளம், கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில்
சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் பங்கேற்றார்.

சங்கரன்கோவில் ஸ்ரீ.கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வைத்து தென்காசி மாவட்டம் நாட்டுப்புற கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கலைச் சேவையில் வெள்ளிவிழா காணும் பெரியூர் கலை வளர்மணி முத்துராமலிங்கம் அவர்களுக்கு பாராட்டு விழா, நாட்டுப்புற கலைஞர்களுக்கு பாராட்டு விழா, அனைத்து துறை சார்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா என 3 நிகழ்வுகளை உள்ளடக்கி முப்பெரும் விழா நடைபெற்றது.

முப்பெரும் விழாவிற்கு ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பழனிச்செல்வம் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் காளிதாஸ் வரவேற்புரை ஆற்றினார். கலைச்சுடர்மனி வஸ்தல பிரியா, திருநாதகிரி ஜோதி ராமலிங்கம், காளீஸ்வரன், பிச்சையா என்ற குட்டித்துரை, முனிவேல் மூர்த்தி, மாடசாமி, சூரியகாந்தி, சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முப்பெரும் விழாவின் முதன்மை நிகழ்வான வெள்ளிவிழா கண்ட கலை வளர்மணி முத்துராமலிங்கம் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. முத்துராமலிங்கம் அவர்களுக்கு மலர் கிரீடம் சூட்டி ஆளுயர மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அனிதா முத்துராமலிங்கம் அவர்களின் கலைச் சேவையை பாராட்டி விருது வழங்கினார். சிவகிரி சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் மைதீன் பட்டாணி பாராட்டி பேசினார். அதன்பின்பு 300-ற்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழும் விருதும் வழங்கப்பட்டது. ஓய்வு பெற்ற அரசு தலைமை மருத்துவர் பத்மநாதன், மருத்துவர்கள் அகிலாண்ட பாரதி, பாலவிக்னேஷ், வழக்கறிஞர்கள் வேல்ராஜன், வீரபத்திரசாமி, யோகா ஜெயராம், பெரியூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயபால் வெள்ளத்துரை உள்ளிட்ட சங்கரன்கோவில் பகுதியை சார்ந்த பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 100 சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டம் வில்லிசை நையாண்டி மேளம், கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவரும் கலை சேவையில் வெள்ளி விழா கண்ட வில்லிசை கலைஞருமான முத்துராமலிங்கம் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்.

நிகழ்வில் திருநெல்வேலி கலை பண்பாட்டு துறை அலுவலர் கணேசன், தமிழக வெற்றிக் கழகத்தின் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மாரியப்பன், தென் மண்டல முதிர்ந்த கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் பாபுராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.

அதன்பின்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை சுடர்மணி பாலகிருஷ்ணன் குழுவினரின் மங்கள வாத்தியம், முனிவேல்மூர்த்தி குழுவினரின் கிராமிய பாடல், மங்களம் என்ற குமுக்காண்டன் கலைக்குழுவினரின் கிராமிய பாடல், தர்மத்தூரணி சண்முகவேல் கிருஷ்ணா கலை குழுவினரின் கிராமிய பாடல், காளைப் பாண்டி, குருசாமி சத்யா கலைக் குழுவின் கிராமிய பாடல், ஜமுனாராணி குழுவினரின் வில்லுப்பாட்டு, வடக்கு அழகு நாச்சியாபுரம் சண்முகவேல் ஆசிரியர் கலைக்குழுவை சார்ந்த ராஜேஸ்வரி ஆனந்தராஜ் மற்றும் மார்க்கோஸ் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள், கலைசுடர்மணி வஸ்தல பிரியா கலைக்குழுவின் கிராமிய நிகழ்ச்சிகள், பரமசிவன் கலைக் குழுவின் நையாண்டி மேளம், புளியங்குடி பழனிச்சாமி கலைக்குழுவின் நையாண்டி மேளம், காலேஜ் ராஜ் குழுவின் நையாண்டி மேளம், வடக்கு அழகு நாச்சியாபுரம் ராஜ் குழுவினரின் நையாண்டி மேளம், பனையூர் முருகன் குழுவின் பேண்ட் வாத்தியம், சொக்கலிங்கபுரம் முருகன் குழுவினரின் சிலம்பாட்டம், திருநெல்வேலி சரவணன் கலைவாணி கலைக்குழுவின் கரகாட்டம், வல்லம் மாரியம்மாள் குழுவின் வில்லிசை, தென்காசி அழகு செல்வி வில்லிசை குழுவினர், சிவகாசி பாண்டி ராணி வில்லிசை குழுவினர், விஸ்வநாதபேரி கலைமுதுமணி டாக்டர் தாஜுதின் ஆசிரியர் அவர்களின் கிராமிய பாடல், திருநெல்வேலி கலை வளர்மணி புருஷோத்தமன் சித்ர சபை நாட்டியாஞ்சலி குழுவினரின் பரதநாட்டியம், கலை வளர்மணி ஷேசப்பிரியா குழுவினரின் மகாகவி பாரதியார் குறித்த இன்னிசை பாடல், சங்கரன்கோவில் அரசு கலைக்கல்லூரி கலைக்குழுவினரின் தப்பாட்டம் ஒயிலாட்டம், வடக்கு அழகு நாச்சியாபுரம் கலைச்செல்வி அவர்களின் வில்லிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இறுதியில் கிராமிய பாடகர் சண்முகவேல் நன்றி உரை ஆற்றினார். முப்பெரும் விழா நிகழ்வினை ஆசிரியர் பயிற்றுநர் ஆனந்த் மற்றும் திரைப்பட உதவி இயக்குனர் உமாபாலன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *