September 8, 2026

Seithi Saral

Tamil News Channel

வாசுதேவநல்லூரில் பெண் கொலை- அக்காளின் கணவர் சரண்

1 min read

Woman murdered in Vasudevanallur; sister’s husband surrenders.

8/9/2026
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் பகுதியில் தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணை நள்ளிரவில் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த நபர்
வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

வாசுதேவநல்லூர் சங்கிலி வீரன் 1-வது தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 60). இவர் கூலித் தொழிலாளி. இவரது மனைவி முனியம்மாள். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் திருமணம் முடிந்து கணவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.


முனியம்மாளின் தங்கை முத்துலட்சுமி (வயது 55). சில ஆண்டுகளுக்கு முன்பு அதே தெருவில் வசித்து வந்த இவர் சமீப காலமாக ஊட்டியில் வசித்து வந்தார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முனியம்மாள் உடல்நிலை பாதிப்பு காரணமாக இறந்து விட்டார். இதனால் ஊட்டியில் வசித்து வந்த முனியம்மாளின் தங்கை முத்துலட்சுமி (வயது 55) தனது அக்காள் வீட்டிற்கு வந்திருந்தார்.

இந்நிலையில் 30-வது நாள் காரியங்கள் முடியும் வரை முத்துலட்சுமியை ஊரில் இருக்குமாறு உறவினர்கள் தெரிவித்து உள்ளனர். அதைத் தொடர்ந்து முனியம்மாளின் கணவரும் முத்துலட்சுமியை ஊரில் இருக்குமாறு கூறியுள்ளார். மேலும் கணவனை இழந்த முத்துலட்சுமி ஊட்டிக்கு செல்ல வேண்டாம் எனக்கு மனைவியாக இருக்குமாறு வற்புறுத்தி உள்ளார். அதற்கு முத்துலட்சுமி மறுப்பு தெரிவித்தார்.
இதையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே நேற்றிரவு முன்தினம் வாக்குவாதம்
ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நடராஜன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து முத்துலட்சுமியை சரமாரியாக வெட்டி உள்ளார்.

இதில் பலத்தகாயம் அடைந்த முத்துலட்சுமி அலறியவாறு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் உடனடியாக முத்துலட்சுமியை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே இறந்து
விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நடராஜன் வாசுதேவநல்லூர் நிலையத்தில் சென்று போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவங்களை போலீசாரிடம் கூறி சரண் அடைந்தார்.

உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று முத்து லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது மனைவியின் தங்கையை அக்காள் கணவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *