September 11, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையத்தில் பாரதி, காந்தி, விவேகானந்தர் தின விழா

1 min read

oplus_131074

Bharathi, Gandhi, and Vivekananda Day celebrations in Kadayam

10.9.2026
சேவாலயா அமைப்பின் சார்பில், கடையத்தில் உள்ள செல்லம்மா-பாரதி கற்றல் மையம் மற்றும் கிளை நூலகத்தில் பாரதி, காந்தி, விவேகானந்தர் தின விழா 2 நாள் கொண்டாடபடுகிறது. இதில் முதல் நாள் விழா (கலை நிகழ்ச்சி மற்றும் யோகா) இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

​நிகழ்ச்சியின் தொடக்கமாக மாலை 6.00 மணிக்கு செல்லம்மா-பாரதி திருவுருவச் சிலைகளுக்கும், அதனைத் தொடர்ந்து பாரதி, காந்தி மற்றும் விவேகானந்தர் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர், சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர்.

​செல்லம்மா பாரதி கலாநிலைய மாணவர்களின் தொடக்கப் பாடலுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், சேவாலயா நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான முரளிதரன் வரவேற்புரையாற்றினார்.

​விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட
​தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி விமூர்த்தானந்தர், ​காந்தி கல்வி நிலையத் தலைவர் மோகன் மற்றும் வாருணி மோகன், ​பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் (ப.நி) சிவசங்கர்
ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

​அதனைத் தொடர்ந்து, செல்லம்மா பாரதி கலாநிலைய மாணவ-மாணவிகள் வழங்கிய கலை நிகழ்ச்சிகளும் யோகா செய்முறைகளும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

oplus_131074

​இறுதியாக, கடையம் திருவள்ளுவர் கழக பொதுச் செயலாளர் க. சோ. கல்யாணி சிவகாமிநாதன் நன்றியுரை ஆற்றினார். தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு 2வது நாள் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கடையம் திருவள்ளுவர் கழக தலைவர் ஆ.சேதுராமலிங்கம். நூலகர் மீனாட்சி சுந்தரம், கடையம் வியாபாரிகள் சங்க செயலாளர் ஷேக் முகமதுகான் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். கடையம் சத்திரம் செல்லம்மாள் பாரதி பெண்கள் உயர்நிலைப்பள்ளி செயலாளர் வேங்கட ரமணா, செல்லம்மாளின் மருமகன் சுந்தர் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள். சேவாலயா முரளிதரன் வரவேற்கிறார். க.சோ. கல்யாணிசிவகாமிநாதன் நன்றி கூறுகிறார். கலைநிழ்ச்சிகளும் பரிசளிப்பும் நடக்கிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *