September 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழ் வளர்ச்சி-பண்பாட்டு மையத்தின் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு

1 min read

Office bearers of the Tamil Development and Cultural Centre elected unopposed

10.9.2026
தமிழ் வளர்ச்சி-பண்பாட்டு மையத்தின் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு. தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு
நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் மோகன் சான்றிதழ்களை வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராகக் கொண்டு தமிழ்நாட்டில் ஒரே அமைப்பாக பாளையங் கோட்டையில் தமிழ் வளர்ச்சி – பண்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அதன் நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.

2026 – 29 ஆம் ஆண்டுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு அதில் போட்டியிடுபவர்களின் வேட்பு மனுக்கள் செப்டம்பர் 5ஆம் தேதி பரிசீலிக்கப்பட்டது. போட்டி இல்லாத காரணத்தால் இரண்டு துணைத் தலைவர்கள், இரண்டு இணைச் செயலாளர்கள், பொருளாளர், மற்றும் 17 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குனர் கனகலட்சுமி தலைமை தாங்கினார். தேர்தல் நடத்தும் அலுவலராகப் பணியாற்றிய வட்டாட்சியர் மாரி ராஜா முன்னிலை வகித்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்களை அறிவித்தார்.

இதன்படி துணைத் தலைவர்களாக புத்தனேரி செல்லப்பா, வழக்கறிஞர் நெல்லை சுதர்சன் ஆகியோரும் இணைச் செயலாளர்களாக கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி, பேராசிரியர்கட்டளை
கைலாசம் ஆகியோரும் பொருளாளராக வழக்கறிஞர் மதாரும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் மோகன் அவர்களிடமிருந்து சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செயற்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் இராமச்சந்திரன், நச்சினார்க்கினியன், ஆசிரியர் சொக்கலிங்கம், நல்லாசிரியர் வை.ராமசாமி, சங்கை வள்ளி மணாளன், சக்தி பிரபாகரன், உன்னைச் செழியன் காஜாமைதீன், கவிஞர் முருகன், வழக்கறிஞர் விஜயகுமார், மயன் ரமேஷ் ராஜா, பாரதிதாசன், அப்துல் ஜபார், முகமது ஈஷா மானேந்தியப்பன், செல்வேந்திரன், செல் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான செல்வம் ஆகியோர் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனந்த் மோகன் பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்திற்கும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் நன்றி தெரிவித்து பயனாடை மற்றும் நூல்களை வழங்கினர். நிறைவாக கலைமதி அனைவருக்கும் நன்றி கூறினார். தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அலுவலர்கள் தமிழ் செல்வி, செல்வம் ஆகியோர் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *