September 13, 2026

Seithi Saral

Tamil News Channel

‘எஸ்-500’ ஏவுகணைகளை வழங்க ரஷியா சம்மதம்: மோடி- புதின் உறுதி

1 min read

Russia agrees to supply ‘S-500’ missiles: Modi-Putin confirm.

12.9.2026
ரஷிய அதிபர் புதினும், இந்தியப் பிரதமர் மோடியும் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது இந்தியாவுக்கு அதிக அளவில் ராணுவ உதவிகளை செய்ய புதின் சம்மதம் தெரிவித்தார்.

டெல்லியில் 2 நாள் பிரிக்ஸ் மாநாடு இன்று மதியத்திற்குப் பிறகு தொடங்கியது. இதில் பங்கேற்க தலைவர்கள் அனைவரும் டெல்லிக்கு வந்துவிட்டார்கள். அந்தவகையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று முன்தினம் நள்ளிரவே டெல்லிக்கு வந்து சேர்ந்தார். அவருடன் முக்கிய குழுவினரும் வந்துள்ளார்கள். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேற்று மாலையில் புதினும், பிரதமர் மோடியும் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இவர்களுக்கு துணையாக இரு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். அந்தவகையில் இந்திய பிரிவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் பங்கேற்றார்.

இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவு, வர்த்தகம், உக்ரைன்-வளைகுடா போர் விவகாரம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தார்கள்.

உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என புதினிடம் மோடி அறிவுரை வழங்கி உள்ளார். மோடியை ரஷியாவுக்கு வருமாறு புதின் அழைப்பு விடுத்துள்ளார். அதை மோடி ஏற்றுக்கொண்டார். அதன்படி இந்த ஆண்டு இறுதியில் ரஷியாவுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய பேச்சுவார்த்தையின் போது ராணுவ உதவிகள் தொடர்பான அம்சங்களும் இடம் பெற்றன. இந்திய ராணுவத்துக்கு ரஷியாதான் அதிக அளவில் ஆயுதங்களை சப்ளை செய்து வருகிறது.

எ-400 ரக ஏவுகணைகளை ரஷியாவிடம் இருந்து இந்தியா வாங்கி உள்ளது. இந்த ஏவுகணை 400 கி.மீ. தூரம் சென்று எதிரிகளின் வான் இலக்குகளை தாக்கும் வல்லமை கொண்டது. இந்த ஏவுகணைகள் தான் ஆபரேஷன் சிந்தூரின் போது கதாநாயகனாக திகழ்ந்தது. ஆகவே கூடுதலாக எஸ்-100 ரக ஏவுகணைகளை வாங்க இந்தியா விரும்பியது.

ஆனால்-500 ரக ஏவுகணைகளை வழங்கவும் ரஷியா முன்வந்துள்ளது. இந்த ஏவுகணைகள் 600 கி.மீ. தூரம் சென்று தாக்க வல்லவை. மேலும் எஸ் 400 ஏவுகணைகளின் பராமரிப்பு வசதிகளை இந்தியாவில் மேற்கொள்ளவும் புதின் சம்மதம் தெரிவித்துள்ளார்.

மேலும் சு-57 ஸ்டெல்த் ரக போர் விமானங்களையும் தர ரஷியா முன்வந்துள்ளது. ஸ்டெல்த்ரக விமானங்கள் எதிரிகளின் ரேடார்களில் பதியாமல் மின்னல் வேகத்தில் செல்லக் கூடியவை.

இதுபோன்ற விமானங்களை அமெரிக்கா, ரஷியா, -சீனா ஆகிய 3 நாடுகள்தான் தயாரித்துள்ளன. ஆகவே இந்தியாவும் இவ்வகை விமானங்களைப் பெற விரும்புகிறது. அதை ரஷியா பூர்த்தி செய்கிறது.

இதைத் தவிர இந்தியாவிடம் ரஷிய தயாரிப்பில் உருவான 260 சு-30 எம்.கே.ஐ. போர் விமானங்கள் உள்ளன. இந்த விமானங்களை மேம்படுத்தி சூப்பர் விமானங்களாக மாற்றவும் இசைவு தெரிவிக்கப் பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *