October 29, 2026

Seithi Saral

Tamil News Channel

மருதம்புத்தூரில் மனைவி நல விழாவில் 200 தம்பதியர்கள் பங்கேற்பு

1 min read

200 couples participate in a ‘Wife’s Well-being’ event in Marudhamputhur

12.9.2026
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள
மருதம்புத்தூரில் நடைபெற்ற மனைவி நல வேட்பு விழாவில் 200க்கும் மேற்பட்ட தம்பதியர் கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரில் ஸ்ரீமன் ராமசாமி, மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஆலங்குளம் மனவளக்கலை மன்றம், மருதம்புத்தூர் தவ மையம் சார்பில் மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது.

மருதம்புத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பூசத்துரை தலைமை தாங்கினார். ஆலங்குளம் யூனியன் கவுன்சிலர் சங்கீதா சுதாகர், ஆலங்குளம் மனவளக்கலை மன்ற தலைவர் ஆதித்தன், பேராசிரியர் கணேசன், புலவர் சிவஞானம் மற்றும் 200க்கும் மேற்பட்ட தம்பதியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பங்கேற்ற தம்பதியருக்கு குடும்ப வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, அன்புடனும், புரிதலுடனும் வாழ்வதன் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து தம்பதியர்களின் நலனுக்காக சிறப்பு வேட்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.; ஒவ்வொரு கணவரும், தங்கள் மனைவிக்கு ரோஜா மலர் கொடுத்தும், தலையில் சூட்டி விட்டும் அன்பை வெளிப்படுத்தினர்.

மேலும் தங்கள் கைகளில் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றிக் கொண்டனர். மனைவிமார்கள் தங்கள் கணவருக்கு வாழைப்பழம் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து இல்லற வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சியும் அமைதியும் நிலைத்திருக்க வழிமுறைக்கான சொற்பொழிவு நடத்தப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *